திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம் காக்கங்கரை கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான குளத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகக் கூறி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், காக்கங்கரை கிராம மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் இந்த மனுவை வழங்கினர். அரசு குளத்தை ஆக்கிரமிக்க முயலும் நபர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.



