Settings

முகப்பு/செய்திகள்/கனரக லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
செய்திகள்

கனரக லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

🕒 26 அக்., 2026, 12:03 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கனரக லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
✨

AI Highlights

  • •*முன்னாள் சென்ற கனரக லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: ஓட்டுனர், நடத்துனர், பயணிகள் என 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.*

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

*முன்னாள் சென்ற கனரக லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: ஓட்டுனர், நடத்துனர், பயணிகள் என 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.* அரியலூர் மாவட்டம் வாரணவாசி சமத்துவபுரம் அருகே பட்டுக்கோட்டையில் இருந்து அரியலூர் நோக்கி, அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. வாரணவாசி கிராமத்திலுள்ள சமத்துவபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது முன்னாள் சென்ற கனரக லாரியில் பின்புறம் மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. அரசு பேருந்தில் முன்பக்க கண்ணாடி முற்றிலும் நொறுங்கி கீழே விழுந்த நிலையில், பேருந்தில் உள்ளிருந்த இருக்கைகளும் உடைந்து விழுந்தன. இதில் ஓட்டுநர் மணிகண்டன், நடத்துநர் இளையராஜா உள்ளிட்ட பயணிகள் என மொத்தம் 18 பேர் காயங்களுடன் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வாரணவாசி சமத்துவபுரம் அருகே அடிக்கடி விபத்து ஏற்படுவதை கருதி அந்த இடத்தில் சாலை குறுக்கே பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ள நிலையில், பேரிக்கடை கடந்து செல்வதற்காக கனரக லாரி நின்ற போது, பின்னால் வந்த அரசு பேருந்து ஓட்டுநர் கவனக்குறைவாக லாரியில் பின்னால் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔