Settings

முகப்பு/ஆன்மீகம்/நாகை தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்!
ஆன்மீகம்

நாகை தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்!

🕒 17 நவ., 2026, 08:35 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நாகை தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •நாகப்பட்டினம் மாவட்டம் தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு மதுரபாஷினி உடனுரை ஸ்ரீ தேவபுரீஸ்வரர் சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா கோலாகலமாகத் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக கடந்த 16ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இதையொட்டி, தேரடி சுந்தர விநாயகர் ஆலயத்தில் இருந்து பெண்கள் ஊர்வலமாக சீர்வரிசை தட்டுகளை எடுத்து வந்தனர். தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு நிகழ்வும், மாலை மாற்றும் வைபவமும் நடைபெற்றன. பின்னர், மேள தாளங்கள் முழங்க சுவாமி ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு, சன்னதி முன்பாக மலர் அலங்காரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டார்.

நிகழ்வின் ஒரு பகுதியாக சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, மாலை மாற்றுதல், வஸ்திரம் சாத்துதல் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றன. மங்கள வாத்தியங்கள் மற்றும் வேத மந்திரங்கள் ஒலிக்க, ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி வள்ளி மற்றும் தேவசேனாவுக்குத் திருமாங்கல்யம் அணிவித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனையில் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தீபத்திருவிழா: குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அடையாள அட்டைகள் அணிவிப்பு!ஆன்மீகம்

தீபத்திருவிழா: குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அடையாள அட்டைகள் அணிவிப்பு!

Manimaran🕒 நவ. 24
திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!ஆன்மீகம்

திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!

Nivedha🕒 நவ. 24
தீபத் திருவிழா: கொப்பரைக்கு பூஜை நடைபெற்றதால் பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!ஆன்மீகம்

தீபத் திருவிழா: கொப்பரைக்கு பூஜை நடைபெற்றதால் பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!

Vijay🕒 நவ. 24
திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டதுஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

Srinivasan🕒 நவ. 24
திருப்பரங்குன்றத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 144 தடை உத்தரவுக்கிடையே கிரிவலம்!ஆன்மீகம்

திருப்பரங்குன்றத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 144 தடை உத்தரவுக்கிடையே கிரிவலம்!

Vijay🕒 நவ. 24
ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் அரசு கலைக்கல்லூரி வேண்டி கொதித்தெழுந்த மாணவர்கள்!தமிழ்நாடு

ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் அரசு கலைக்கல்லூரி வேண்டி கொதித்தெழுந்த மாணவர்கள்!

Muralidharan🕒 நவ. 24
நாளை புதன்கிழமை மின் தடை: எந்தெந்த ஊர்களில் மின்சாரம் இருக்காது?செய்திகள்

நாளை புதன்கிழமை மின் தடை: எந்தெந்த ஊர்களில் மின்சாரம் இருக்காது?

Ramachandran🕒 நவ. 24
விலையில்லா வேஷ்டி, சேலை தரம் குறித்து அமைச்சர் விஜய் பாலாஜி நேரில் ஆய்வு!செய்திகள்

விலையில்லா வேஷ்டி, சேலை தரம் குறித்து அமைச்சர் விஜய் பாலாஜி நேரில் ஆய்வு!

Dinesh🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔