விருதுநகர் ரோசல்பட்டி சாலையில் உள்ள மதன் மருத்துவமனை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். விருதுநகர் பாண்டியன் நகரிலிருந்து கே.டி.எம் (KTM) பைக்கில் சந்தோஷ் குமார் (21) என்ற வாலிபர் ரோசல்பட்டி நோக்கிச் சென்றுள்ளார். அதேவேளையில், ரோசல்பட்டி பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஜான் காலெப் (18) மற்றும் நவீன் பிரகாஷ் (21) ஆகிய இரு இளைஞர்கள் விருதுநகர் நோக்கி வந்துள்ளனர்.மதன் மருத்துவமனை அருகே இரு வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பலமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில், KTM பைக்கை ஓட்டி வந்த சந்தோஷ் குமார் காதில் ரத்தம் வழிந்தும், முகத்தில் பலத்த காயத்துடனும் படுகாயமடைந்தார். ஆக்டிவா வாகனத்தில் வந்த ஜான் காலெப் நவீன் பிரகாஷிக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. விபத்து குறித்துத் தகவலறிந்த விருதுநகர் ஊரகக் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த மூன்று இளைஞர்களையும் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தலையில் பலத்த காயமடைந்த சந்தோஷ் குமார் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து விருதுநகர் ஊரகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள்
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 இளைஞர்கள் படுகாயம்!
🕒 9 செப்., 2026, 05:34 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •விருதுநகர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 இளைஞர்கள் படுகாயம்!
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
