நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே ஜேடர்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது மினி ஆட்டோ மோதிய விபத்தில், 55 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வடகரையாத்தூர் பெரியூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (55), இன்று காலை வடகரையாத்தூரில் உள்ள கிரி டீக்கடையில் தேநீர் அருந்திவிட்டு, தனது டிவிஎஸ் 50 இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் செல்வதற்காகப் புறப்பட்டுள்ளார். அப்போது, எதிரே வந்த டாடா ஏசி மினி ஆட்டோ எதிர்பாராத விதமாக அவரது இருசக்கர வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் தமிழரசனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜேடர்பாளையம் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தமிழரசனின் உடலை 108 ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து தொடர்பாக டாடா ஏசி வாகன ஓட்டுநர் மனோஜ் என்பவரைக் கைது செய்துள்ள காவல் துறையினர், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜேடர்பாளையம் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

