நாகை மாவட்டம், சர்வதேச ஆன்மிகத் தலமான வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் 15 வயது சிறுமிகள் இருவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கேரளாவைச் சேர்ந்த இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்திலிருந்து 15 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில், அக்குழுவைச் சேர்ந்த இரு இளைஞர்கள், வேளாங்கண்ணி கடற்கரைப் பகுதியில் நின்று கொண்டிருந்த 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை ஆசைவார்த்தைகள் கூறி பிரகாஷ் விடுதியில் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமிகள் இருவரையும் நள்ளிரவு முழுவதும் அறையில் அடைத்து வைத்து வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த வேளாங்கண்ணி காவல்துறையினர் விரைந்து சென்று சிறுமிகளை மீட்டனர். தொடர்ந்து, இக்குற்றச்சாட்டின் பேரில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஆண்டனி மற்றும் விஷால் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட சிறுமிகள் இருவரும் நாகப்பட்டினத்தில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வேளாங்கண்ணி பகுதியில் 15 வயது சிறுமிகளுக்கு நேர்ந்த இக்கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள்
விடுதியில் 15 வயது சிறுமிகள் இருவருக்கு பாலியல் வன்கொடுமை: கேரள இளைஞர்கள் 2 பேர் கைது
🕒 22 அக்., 2026, 02:14 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •வேளாங்கண்ணி விடுதியில் 15 வயது சிறுமிகள் இருவருக்கு பாலியல் வன்கொடுமை: கேரள இளைஞர்கள் 2 பேர் கைது
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
