Settings

முகப்பு/செய்திகள்/பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேட்டி
செய்திகள்

பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேட்டி

🕒 23 அக்., 2026, 06:26 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேட்டி
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டத்தில் தொடர் கனமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கியூ.வி.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்துவரும் சூழலில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கியூ.வி.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மழை பாதிப்புகளை எதிர்கொள்ளத் துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளுடனும் கடந்த முன்தினம் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாகத் தீவிரப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

பேருந்து பணிமனைக்குள் மழைநீர் தேங்கிய விவகாரம் குறித்து அதிகாரிகளிடம் பேசி, உடனடியாகத் தண்ணீர் வெளியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தடையின்றி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சாத்தூர் பகுதியில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த அமைச்சர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளதாகக் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்கத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔