Settings

முகப்பு/செய்திகள்/தோட்டத்துல காப்பர் வயரை அப்பட்டமா திருடிய கூத்து: மாட்டிக்கிட்ட ரெண்டு பேர்!
செய்திகள்

தோட்டத்துல காப்பர் வயரை அப்பட்டமா திருடிய கூத்து: மாட்டிக்கிட்ட ரெண்டு பேர்!

🕒 21 அக்., 2026, 03:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தோட்டத்துல காப்பர் வயரை அப்பட்டமா திருடிய கூத்து: மாட்டிக்கிட்ட ரெண்டு பேர்!

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

✨

AI Highlights

  • •ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் விவசாயத் தோட்ட மோட்டார் காப்பர் வயர்களைத் திருடி விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயத் தோட்ட மோட்டார்களுக்குப் பயன்படுத்தப்படும் காப்பர் வயர்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன. இது குறித்து காவல்துறையினருக்கு வந்த புகார்களின் அடிப்படையில் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தவளகிரி மலை அடிவாரப் பகுதியில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்ட இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பவானிசாகர் குடில் நகரைச் சேர்ந்த சரவணன் மற்றும் சத்தியமங்கலம் அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பதும், அவர்கள் விவசாயத் தோட்டங்களில் திருடிய காப்பர் வயர்களை தீயிட்டு எரித்து, அதிலுள்ள செம்பை மட்டும் தனியாகப் பிரித்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த சத்தியமங்கலம் காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔