Settings

முகப்பு/செய்திகள்/நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு: கைதி மரணத்திற்கு நீதி கேட்டு முற்றுகை போராட்டம்
செய்திகள்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு: கைதி மரணத்திற்கு நீதி கேட்டு முற்றுகை போராட்டம்

🕒 22 அக்., 2026, 11:12 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு: கைதி மரணத்திற்கு நீதி கேட்டு முற்றுகை போராட்டம்

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 3 படங்கள்):

✨

AI Highlights

  • •நெல்லை அரசு மருத்துவமனையில் கைதி சங்கரலிங்கம் உயிரிழந்த விவகாரத்தில், நீதி கேட்டு உறவினர்கள் 9-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி சங்கரலிங்கம் (27) உயிரிழந்த விவகாரத்தில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து 9-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கீழ முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் மீது கொலை மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. கடந்த 10-ம் தேதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 14-ம் தேதி அவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மரணத்தில் மர்மம் உள்ளதாகக் குற்றம் சாட்டும் அவரது உறவினர்கள், சம்பந்தப்பட்ட டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர். இந்நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மனு அளிக்க, சங்கரலிங்கத்தின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், சங்கரலிங்கத்தின் மனைவி உள்ளிட்ட 10 பேர் மட்டும் அமைச்சரைச் சந்தித்து மனு அளிக்க அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔