சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/குடிநீர் வினியோகத்திற்கு வைக்கப்பட்டிருந்த குழாய்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
செய்திகள்

குடிநீர் வினியோகத்திற்கு வைக்கப்பட்டிருந்த குழாய்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

🕒 5 செப்., 2026, 10:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
குடிநீர் வினியோகத்திற்கு வைக்கப்பட்டிருந்த குழாய்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

AI Highlights

  • குடிநீர் வினியோகத்திற்கு வைக்கப்பட்டிருந்த குழாய்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் பொதிகை நகர் பகுதியில் குடிநீர் விநியோகத்திற்காக மேற்கொள்ளப்பட இருந்த பணிக்கு வைக்கப்பட்டிருந்த எச் டி பி குழாய்கள் திடீரென தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளது மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் வழங்க அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் பத்து ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது முழுமையாக பணிகள் நிறைவடையாத நிலையில் மேலப்பாளையம் மண்டலத்தின் ஒரு சில வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பரிச்சாரத் திட்டம் துவங்கப்படுகிறது அதன் அடிப்படையில் குழாய்கள் பதிக்கும் பணி பொதிகை நகர் பகுதியில் நடைபெற்று வருகிறது அதற்காக ஏராளமான குழாய்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது இன்று மதியம் குழாய்களில் திடீரென தீப்பிடித்து பகுதி முழுமையாக கரும்புகை சூழ்ந்தது எச்டிபி ஓஸ் என அழைக்கப்படக்கூடிய அந்த பைப்புகள் அடுத்தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை தீக்கிரையாகி நாசமானது சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து குழாய்களில் பரவிய தீயை அணைத்ததோடு தொடர்ந்து மேலும் பரவாமல் தடுத்தனர் திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 105 டிகிரி வெப்பம் கடந்த சில நாட்களாக கொளுத்தி வருகிறது அதன் காரணமாக ஏற்பட்ட வேதிவினை மாற்றத்தில் தீப்பிடித்ததா அல்லது விஷமிகள் யாரேனும் குழாய்களுக்கு தீ வைத்து சென்றார்களா என்பது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் சம்பவத்திற்கான காரணம் எவ்வளவு குழாய்கள் எரிந்துள்ளது பாதிப்பின் மதிப்பீடு என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிதர் ராணா தெரிவித்துள்ளார்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔