Settings

முகப்பு/செய்திகள்/டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்: தீபாவளிக்கு முன் போனஸ் வழங்க கோரிக்கை
செய்திகள்

டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்: தீபாவளிக்கு முன் போனஸ் வழங்க கோரிக்கை

🕒 21 அக்., 2026, 09:46 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்: தீபாவளிக்கு முன் போனஸ் வழங்க கோரிக்கை

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

✨

AI Highlights

  • •பெரம்பலூரில் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு, டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு சுமை பணி தொழிலாளர் சம்மேளனம் (CITU) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத கூலியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அனைத்து மதுபான பெட்டிகளை ஸ்கேனிங் செய்யும் பணிகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புக்கொண்டபடி கூலியை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், குடோன் சுமை பணி தொழிலாளர்களுக்கு மதுபான பெட்டிகளை கடைகளுக்கு அனுப்பும் ஏற்று கூலியை ரூ. 5 என டெண்டர் விதிகளில் குறிப்பிட வேண்டும், இ.எஸ்.ஐ. மற்றும் பி.எஃப். சட்டங்களின்படி அனைத்து தொழிலாளர்களுக்கும் பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும் மற்றும் குடோன்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔