இந்திய மாணவர் சங்கம் நெல்லை மாவட்டக் குழு சார்பில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கக் கோரியும், ஜனநாயக உரிமைக்கு எதிரான 'SIR' முறையை ரத்து செய்யக் கோரியும், நாடு தழுவிய அளவில் டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நெல்லையில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதன் முதல்கட்டமாக இன்று நெல்லை மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி, மானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளுக்கு சென்றனர். முன்னதாக கல்லூரி முன்பு போராட்டத்திற்கான கரணங்களை வலியுத்தி பேசினர், இந்தி தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும், SIR முறையை ரத்து செய்ய வேண்டும் ,டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டத்தற்கு கண்டனத்தை தெரிவிப்பதாவும் கூறினர்.
தொடர்போராட்டங்களை மாணவ அமைப்பு அறிவித்துள்ளதால் இதன் தொடர்ச்சியாக, நாளை 14-ந்தேதி நெல்லை முழுவதும் முதல்முறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரமும், மாபெரும் கையெழுத்து இயக்கமும் நடைபெற உள்ளது.
15-ம் தேதி நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் கண்டனப் போராட்டமும், உச்சகட்டமாக வரும் அக். 17-ம் தேதி திருநெல்வேலி சந்திப்பு தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் பிரம்மாண்ட போராட்டமும் நடத்த முடிவு செய்துள்ளனர். இன்று நடந்த கருப்பு பேஜ் அணிந்து செல்லும் போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

