விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அருங்குருக்கை புதூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் விக்ரமன், பள்ளிச் சிறுமிகளிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
மாணவிகளுக்குத் தொடர்ந்து மூன்று நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும் பொதுமக்களும் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.









