திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பைபாஸ் சாலை, இஸ்லாமியா கல்லூரி அருகில் அரிய வகை பாறை ஆந்தை ஒன்று அதிக வெப்பத்தின் காரணமாக மயங்கி விழுந்தது. இதை கண்ட இயற்கை ஆர்வலர்கள் வடிவேல் சுப்பிரமணியம் மற்றும் சேதுராமன் . லட்சுமணன். ரவிந்திரன்.அருள்கனேஷ். ஆகியோர் உடனடியாக ஆந்தையை மீட்டு தண்ணீர் கொடுத்து பாதுகாப்பாக பராமரித்தனர். பின்னர் இது குறித்து வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் அந்த பாறை ஆந்தையை மீட்டு சென்றனர். மேலும் முதலுதவி சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பாறை ஆந்தை என்பது அரிய வகை இனத்தை சார்ந்தது. கோடை வெப்பம் காரணமாக உயிரினங்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து வரும் நிலையில், இந்த சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உரிய நேரத்தில் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த சமூக ஆர்வலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
செய்திகள்
வெப்பத்தால் மயங்கி விழுந்த அரிய வகை பாறை ஆந்தை மீட்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
🕒 13 அக்., 2026, 09:36 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •வாணியம்பாடியில் வெப்பத்தால் மயங்கி விழுந்த அரிய வகை பாறை ஆந்தை மீட்பு - வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
