Settings

முகப்பு/செய்திகள்/ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் உத்தரவு!
செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் உத்தரவு!

🕒 26 அக்., 2026, 06:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் உத்தரவு!
✨

AI Highlights

  • •அர்னாப் புயல் மற்றும் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் சூழலில், ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய விடிய பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து 'அர்னாப்' புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சி.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔