சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/100 நாட்கள் கழித்து இரண்டாவது நாளாக மழை!
செய்திகள்

100 நாட்கள் கழித்து இரண்டாவது நாளாக மழை!

🕒 7 செப்., 2026, 04:39 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
100 நாட்கள் கழித்து இரண்டாவது நாளாக மழை!

AI Highlights

  • விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 100 நாட்கள் கழித்து இரண்டாவது நாளாக மழை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், சுமார் 100 நாட்களுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது நாளாகப் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் தீவிரமாக காணப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி, மம்சாபுரம், வைத்தியலிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பரவலாக பலத்த மழை பெய்தது.

கடந்த நூறு நாட்களாக மழை இன்றி வறண்ட வானிலை நிலவி வந்த சூழலில், நேற்றும் இன்றும் பெய்த தொடர் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔