சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா
செய்திகள்

பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா

🕒 12 செப்., 2026, 05:55 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா

AI Highlights

  • பொள்ளாச்சி அருகே கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் விநாயகர் வேடமணிந்து பக்திப் பாடல்கள் பாடி வழிபட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பொள்ளாச்சி அடுத்த கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் விநாயகர் வேடம் அணிந்தும், விநாயகரின் உருவம் பொறித்த பதாகைகளை ஏந்தியவாறும் பள்ளிக்கு வருகை தந்தனர். தொடர்ந்து மாணவர்கள் பக்திப் பாடல்கள் மற்றும் பஜனைப் பாடல்களைப் பாடி விநாயகப் பெருமானை வழிபட்டனர்.

இதையடுத்து விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் மாணவர்களின் பக்திப் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தன.

தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் ஆர்.வி.எஸ். மாரிமுத்து, பள்ளிச் செயலாளர் எஸ்.டி. ரவிச்சந்திரன், பள்ளி முதல்வர் ஆர். பிரகாஷ், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔