Settings

முகப்பு/செய்திகள்/தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுக! திரண்ட 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்!
செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுக! திரண்ட 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்!

🕒 28 அக்., 2026, 12:45 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுக! திரண்ட 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்!
✨

AI Highlights

  • •திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளின்படி அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு முறையான ஊதியம் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட பலன்கள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 45 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கான அனைத்துப் பலன்களையும் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் முழக்கங்களுடன் ஊர்வலமாக வந்து இந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔