திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு தர்ணாவில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 16 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
முக்கிய கோரிக்கைகள்:
- ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகளை காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும்.
- சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், இளநிலை பொறியாளர்களுக்கு உதவிப் பொறியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதத்தை வழங்க வேண்டும்.
- ஊராட்சி செயலாளர்களின் பணிக்காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியப் பயன்கள் கணக்கிட ஏதுவாக பொதுவான அரசாணை வெளியிட வேண்டும்.
- காலமுறை ஊதியத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு, கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.
- தணிக்கைத் தடைகளை விரைந்து நிவர்த்தி செய்வதுடன், அதன் நிலையை அறிய பிரத்யேக இணையதளத்தை உருவாக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க உறுப்பினர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

