கரூர் மாவட்ட பொது நூலகத்துறை சார்பில் 59-ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, கரூர் கிளைச்சிறையில் சிறைவாசிகளுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
மாவட்ட நூலக அலுவலர் செ.செ. சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 21 சிறைவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் சங்கர் நற்சிந்தனையூட்டும் நூல்களைப் பரிசாக வழங்கிப் பாராட்டினார்.
மேலும், சிறைவாசிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வாசகர் வட்டத்தின் சார்பில் கொசு ஒழிப்பான் கருவியும் சிறை நிர்வாகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.









