விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி அரசு பஸ் மோதியதால் காயமடைந்த சிறுமி, தந்தைக்கு ரூ.1.47 லட்சம் இழப்பீடு வழங்க தவறியதால் நீதிமன்ற உத்தரவின்படி அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கம் அருகே கரிசல்பட்டியை சேர்ந்தவர் சரவணக்கண்ணன், அவரது மகள் அபர்ணா 16. இவர்கள் இருவரும் திருமங்கலம் அருகே 2022ல் பிப்.11 மாலை 6:30 மணிக்கு நடந்த விபத்தில் அரசு பஸ் மோதியதால் காயமடைந்தனர். இவர்களுக்கு இழப்பீடாக ரூ.1.47 லட்சம் வழங்க விருதுநகர் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவின்படி விருதுநகர் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகை கொடுக்காததால் டி.என்., 67 என்ற எண் கொண்ட ஏதாவது ஒரு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி பாலமுருகன் உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் டி.ன்., 67 என் 0913 என்ற எண் கொண்ட அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.
செய்திகள்
இழப்பீடு தராத அரசு பஸ் நிர்வாகம் - நீதிமன்ற உத்தரவின்படி பஸ் ஜப்தி!
The News Outlook
🕒 12 ஆக., 2026, 11:26 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
