Settings

முகப்பு/செய்திகள்/பரபரப்பு: காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இடதுசாரிகள், விசிகவினர் காத்திருப்பு போராட்டம்!
செய்திகள்

பரபரப்பு: காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இடதுசாரிகள், விசிகவினர் காத்திருப்பு போராட்டம்!

🕒 18 நவ., 2026, 12:47 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
பரபரப்பு: காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இடதுசாரிகள், விசிகவினர் காத்திருப்பு போராட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 6
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (6)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •மயிலாடுதுறை பூந்தாழை கிராமத்தில் நான்கு வழிச்சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத ஒப்பந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பூந்தாழை கிராமத்தில் நான்கு வழிச்சாலை பணிகளின் போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத ஒப்பந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி செம்பனார்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பூந்தாழை கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி. இவர் கடந்த 16-ஆம் தேதி இரவு, அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். அப்பகுதியில் எவ்வித எச்சரிக்கை பலகைகளோ அல்லது போதிய வெளிச்சமோ இல்லாததே விபத்திற்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், எச்சரிக்கை விளக்குகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் சாலைப் பணிகளை மேற்கொண்டுவரும் வெல்ஸ்பன் (Welspun) நிறுவனம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தரங்கம்பாடி வட்டாட்சியர் கிரிதரன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டு, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

எனினும், ஒப்பந்த நிறுவனம் இழப்பீடு வழங்க முன்வராததாலும், எஃப்.ஐ.ஆர்-ல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் சேர்க்கப்படாததாலும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கேசவமூர்த்தியின் உடலை பெற மறுத்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் அறிவிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், ஏ.டி.எஸ்.பி சுரேஷ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், காவல் நிலையம் எதிரே காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது.

உயிரிழந்த கேசவமூர்த்திக்கு ஏற்கனவே மனைவி இறந்த நிலையில், 3 குழந்தைகள் மற்றும் திருமணமாகாத தங்கை ஆதரவின்றி தவித்து வருவதால் உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல பகுதிகளில் நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையடையாமல் முறையான வழிகாட்டிப் பலகைகள் மற்றும் எச்சரிக்கை விளக்குகள் இன்றியும் உள்ளதால் இதுவரை 51 பேர் விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக போராட்டக்குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர். விதிகளை மீறும் ஒப்பந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது கேசவமூர்த்தியின் தங்கை துர்காதேவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!செய்திகள்

சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!

Rajan🕒 நவ. 22
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!நகரங்கள்

நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!

Anandakumar🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔