மதுரையில் இருந்து குருவாயூர் வரை விஸ்டாடோம் (Vistadome) கண்ணாடிப் பெட்டியுடன் இயக்கப்படும் புதிய ரயிலுக்கு, ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பயணிகள் சங்கம் சார்பில் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்னக ரயில்வே சார்பில் தமிழகத்தில் முதன்முறையாக விஸ்டாடோம் பெட்டி குருவாயூர் செல்லும் ரயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து புறப்படும் இந்த ரயில் ராஜபாளையம் மார்க்கமாக குருவாயூருக்குச் செல்கிறது. தென்னக ரயில்வேயின் இந்த புதிய சேவைக்கு வரவேற்பú தெரிவிக்கும் வகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலுக்கு ரயில் பயனாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, ரயில் ஓட்டுநருக்குப் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டதோடு, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி ராஜபாளையம் ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

