Settings

முகப்பு/ஆன்மீகம்/குத்தாலம் திரௌபதி அம்மன் கோயிலில் ஐப்பசி பௌர்ணமி சிறப்பு மகாயாகம்
ஆன்மீகம்

குத்தாலம் திரௌபதி அம்மன் கோயிலில் ஐப்பசி பௌர்ணமி சிறப்பு மகாயாகம்

🕒 25 அக்., 2026, 05:37 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
✨

AI Highlights

  • •மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு மகாயாகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் செட்டியார் வடக்கு வீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் ஆலயத்தில், ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு மகாயாகம் நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று சிறப்பு யாகங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பௌர்ணமி நாளான இன்று, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் துர்கை, லட்சுமி, சரஸ்வதி மூலமந்திர ஹோமங்கள் சிறப்பாக நடத்தப்பட்டன.

யாகசாலை பூஜைகளைத் தொடர்ந்து, பூர்ணாஹுதி நிறைவடைந்தது. பின்னர், யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் மேளதாளங்கள் முழங்கக் கோயிலைச் சுற்றி வலம் வந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த புனித நீரைக் கொண்டு திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் செய்யப்பட்டன. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வழிபாட்டிற்குப் பிறகு பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔