Settings

முகப்பு/ஆன்மீகம்/தில்லையாடி கோயிலில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் மற்றும் பாலாபிஷேகம் கோலாகலம்!
ஆன்மீகம்

தில்லையாடி கோயிலில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் மற்றும் பாலாபிஷேகம் கோலாகலம்!

🕒 25 அக்., 2026, 05:14 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
✨

AI Highlights

  • •மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி சார்ந்தாரைக்காத்த சுவாமி கோயிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு பால்குடம் மற்றும் அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் சமேத சார்ந்தாரைக்காத்த சுவாமி கோயிலில், ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு பால்குடம் எடுத்தல் மற்றும் அன்னாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பெண்கள் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, கொண்டு வரப்பட்ட பால் மற்றும் பல்வேறு திரவியப் பொடிகளைக் கொண்டு பெரியநாயகி அம்மனுக்கும், சார்ந்தாரைக்காத்த சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அரிசியால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரங்களுடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இ Aபூஜைகளை கோயில் குருக்கள் குமார் நடத்தி வைத்தார்.

இந்த ஆன்மீக நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔