திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகர் வாசன் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலயத்தில், ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, மூலவர் ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரருக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சுவாமிக்கு அன்னா அபிஷேகம் நடைபெற்று, மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

