செய்திகள்
அரியலூர் ;உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு சோழீஸ்வரர் ஆலயத்தில் 100 மூட்டை அன்னா அபிஷேக விழா துவங்கியது.
🕒 25 அக்., 2026, 09:42 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
அரியலூர் ;உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு சோழீஸ்வரர் ஆலயத்தில் 100 மூட்டை அன்னா அபிஷேக விழா துவங்கியது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சோழீஸ்வரர் கோவில் வரலாற்று சிறப்புமிக்க கோவிலாகும். உலகப் புராதான சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறும்.
அதன்படி இந்தாண்டு கடந்த 23 ஆம் தேதி கணக்கு விநாயகருக்கு யாக பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
நேற்று சோழீஸ்வருக்கு மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது
பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது
இதனையடுத்து இன்று
அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக துவங்கியது.
இன்று காலை 5 மணி அளவில் யாக பூஜைகள் நடைபெற்று.
பின்னர் 6 கொதிகலன்களில் வடிக்கப்பட்ட பச்சரிசி அன்னம் மகா கணபதி ஆலயத்தில் முதல் அன்னம் வைத்து பூஜிக்கப்பட்டது.
பின்னர் கூடைகளில் வேத மந்திரங்கள் ஓத எடுத்துச் செல்லப்பட்ட முதல் அன்னம் சோழீஸ்வரருக்கு சாற்றப்பட்டது.
ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் பக்தி கரகோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தொடர்ச்சியாக 100 மூட்டை பச்சரிசியால் வடிக்கப்பட்ட சாதத்தை சுவாமிக்கு அன்னத்தால் அபிஷேக அலங்காரம் நடைபெறுகிறது மாலை 6 மணிக்கு மகா தீபாரதனை காட்டப்பட உள்ளது.
விழாவில் அரியலூர், பெரம்பலூர், பாண்டிச்சேரி, தஞ்சாவூர், கடலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் காஞ்சி சங்கரமடம், கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டு குழுமம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் ஜெயங்கொண்டம் மீன்சுருட்டி காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு
அதேபோன்று ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
