செய்திகள்
திருவாரூரில் ஆர் எஸ் எஸ் பேரணி நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 5 கிமீ தூரம் பேரணியாக வந்தனர்.
🕒 25 அக்., 2026, 12:56 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
திருவாரூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணி நடைபெற்றது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கிழக்கு கோபுர வாசல் அருகாமையில் இருந்து தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி, தெற்கு வீதி வழியாக நான்கு வீதிகளையும் சுற்றி வந்தது. தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் பனகல் சாலை வழியாக கீழ வீதியில் பேரணி நிறைவுற்றது அதனை தொடர்ந்து அங்கு நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்தில் கோட்ட பொறுப்பாளர் விக்னேஷ் ராம் தலைமையில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் திருவாரூர் கொரடாச்சேரி குடவாசல் நன்னிலம் கூத்தாநல்லூர் பகுதிகளை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சீருடை அணிந்து வந்து பேரணியில் பங்கேற்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் 100கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
