Settings

முகப்பு/செய்திகள்/நெல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை - போக்குவரத்து பாதிப்பு
செய்திகள்

நெல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை - போக்குவரத்து பாதிப்பு

🕒 15 அக்., 2026, 11:36 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நெல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை - போக்குவரத்து பாதிப்பு
✨

AI Highlights

  • •வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக நெல்லையில் பிறபகலில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதற்கிடையே, நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில், நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. ஆனால், பிற்பகலில் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. வானில் கருமேகங்கள் திரண்டு, பகலிலேயே மாலை போல் இருள் சூழ்ந்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே குளிர்ந்த காற்று வீசத் தொடங்கிய நிலையில், இடி-மின்னலுடன் கூடிய பலத்த கனமழை பெய்ய தொடங்கியது. நெல்லை மாநகரப் பகுதிகளான சந்திப்பு (ஜங்ஷன்), வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், டவுன், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், கே.டி.சி. நகர் உள்ளிட்ட அனைத்து முக்கியப் பகுதிகளிலும் இடைவிடாது பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த திடீர் மழையின் காரணமாக, நகரின் பிரதான சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தண்ணீர் சில இடங்களில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் கடந்த இரண்டு வாரங்களாகவே நெல்லையின் உள்பகுதிகளில் சீரான மழை பெய்து வரும் நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்தால் மட்டுமே அணைகளின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது . மாலை 4 மணி நிலவரப்படி ராதாபுரத்தில் 41 மில்லி மீட்டரும் நாங்குநேரியில் 15 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது .

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔