சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.1,15,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.14,385 ஆக உள்ளது.
இதற்கிடையில், வெள்ளி விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

