திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கிருஷ்ணகிரி உமாராணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியோர் இணைந்து இலவச மருத்துவ முகாம் பஷீராபாத் பகுதியில் உள்ள இசுலாமியா அரசு நிதியுதவி துவக்கப்பள்ளி வளாகத்தில் நடத்தினர். முகாமுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் நரி முஹம்மத் நயீம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.டி.நிசார் அஹ்மத்,நகர பொருளாளர் எஸ். இஸ்மாயில், மண்டல பொறுப்பாளர் எஸ்.எஸ்.பி.இம்ரான், கௌரவத் தலைவர் ஆலங்காயம் சமா ஷகீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குண்டு பைசான் அனைவரையும் வரவேற்றார். இதில் கௌரவ விருந்தினராக தமிழக வெற்றி கழகம் திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன் குமார், வணிகர்சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் கே.பி.எஸ்.மாதேஸ்வரன், அஹ்மத்யா ரெஸ்டாரன்ட் நிர்வாக இயக்குநர் ஏ.ஆர்.ஜீஷான், எம்.எஸ்.எஃப் தேசிய பொதுச் செயலாளர் எஸ்.ஹெச்.முஹம்மத் அர்ஷத்,மாநில செயலாளர் ஹெச்.எம்.நவுமான், அஞ்சுமன் குத்தாமுல் இஸ்லாம் பொது செயலாளர் ஷகீல் அஹ்மத் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷா கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாம் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி உமாராணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர் அர்ஷியா தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொது மருத்துவம், இருதய நோய், எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான பிரச்சினைகள், மகளிர் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 272 நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் பஷீராபாத் பள்ளிவாசல் முத்தவல்லி டோக்கு முஹம்மத் இலியாஸ், நகரமன்ற உறுப்பினர்கள் ஏ. நாசீர் கான், ஏ. கலீம் பாஷா, பி.இக்பால் அஹ்மத், வாணியம்பாடி ஜாயின்ட் கமிட்டி தலைவர் சி.எம்.வசீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஆர். ஜி. ஹண்ணன் நன்றி கூறினார்.
செய்திகள்
நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இலவச மருத்துவ முகாம்
🕒 13 அக்., 2026, 04:50 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

