Settings

முகப்பு/செய்திகள்/போலீசாரிடம் தப்பியோடிய ரவுடி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து காயம்!
செய்திகள்

போலீசாரிடம் தப்பியோடிய ரவுடி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து காயம்!

🕒 13 அக்., 2026, 11:56 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
போலீசாரிடம் தப்பியோடிய ரவுடி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து காயம்!
✨

AI Highlights

  • •திருத்தணி அருகே தொடர் வழிபறியில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் அதிரடி கைது

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள தாழவேடு, தும்பிக்குளம், நெமிலி உள்ளிட்ட பகுதியில் இரவு நேரங்களில் தொடர் வழிப்பறி நடைபெற்று வருவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரிணித்க்கு தொடர்ந்து புகார்கள் சென்றதது. மேலும் கடந்த வாரம் வேலைக்குச் சென்று திரும்பிய தொழிலாளியிடம் வழிப்பறி முயற்சியில் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஈடுபட்டதாக திருத்தணி போலீசாருக்கு புகார் வந்தது. இதை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் திருத்தணி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஷுபம் திமான் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை ஈடுபட்டனர். இந்த வழிப்பறிவு சம்பவத்தில் தாழவேடு பகுதியைச் சேர்ந்த அபி என்கிற சோட்டு ( வயது 19), விமல்ராஜ் (20), ராஜி (23), தினேஷ் (21) ஆகியோர் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. மேற்கண்ட நான்கு பேரும் திருத்தணி புதிய புறவழி சாலை மேம்பாலம் அருகே பதுங்கி இருப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மடக்கிப்பிடித்தனர். அப்போது அபி போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அவருக்கு திருத்தணி அரசு மருத்துவமனையில் காலில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது. கைதான 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அபிஷேக் மீது ஏற்கனவே மதுரவாயில், திருத்தணி, கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔