Settings

முகப்பு/செய்திகள்/விவசாயிகள் கோரிக்கை ஏற்பு: திருப்பத்தூரில் ஏழருவி கால்வாய் சீரமைப்புப் பணி தொடக்கம்!
செய்திகள்

விவசாயிகள் கோரிக்கை ஏற்பு: திருப்பத்தூரில் ஏழருவி கால்வாய் சீரமைப்புப் பணி தொடக்கம்!

🕒 18 நவ., 2026, 12:41 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விவசாயிகள் கோரிக்கை ஏற்பு: திருப்பத்தூரில் ஏழருவி கால்வாய் சீரமைப்புப் பணி தொடக்கம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஏழருவி முதல் ஏ.கே. மோட்டூர் வரை 5 கி.மீ. நீளமுள்ள நீர்வரத்து கால்வாயை சீரமைக்கும் பணியை எம்.எல்.ஏ. நல்லதம்பி திருப்பதி தொடங்கி வைத்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஏழருவி முதல் ஏ.கே. மோட்டூர் வரை 5 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்வரத்து கால்வாயை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிர்வாகம் மற்றும் எக்ஸ்னோரா அமைப்பு மூலம் வழங்கப்பட்ட வாடகையில்லா பொக்லைன் இயந்திரம் கொண்டு இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திருப்பதி கொடியசைத்து இத்திருப்பணியைத் தொடங்கி வைத்தார்.

கடந்த 8 மாதங்களில் ஹூண்டாய் மோபிஸ் நிறுவனம் வழங்கிய வாடகையில்லா பொக்லைன் இயந்திரம் மூலம் மாவட்டத்தில் 11 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, காயத்ரி சாரிடபிள் டிரஸ்ட் மூலம் எக்ஸ்னோரா அமைப்பிற்கு கூடுதலாக நான்கு பொக்லைன் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் கடந்த திங்கட்கிழமை மாடப்பள்ளி ஏரியிலும், தற்போது ஏழருவி கால்வாயிலும் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், அடுத்த 60 நாட்களுக்கு இந்த நான்கு இயந்திரங்களைக் கொண்டு மாவட்டம் முழுவதும் நீர்வரத்துக் கால்வாய்கள், நீர்ப்பாசனக் கால்வாய்கள் மற்றும் உபரிநீர் கால்வாய்களை சீரமைக்க மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் வேர்கள் அறக்கட்டளை நிறுவனர் வடிவேல் சுப்பிரமணியன், எக்ஸ்னோரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிரிதரன், ஏ.கே. மோட்டூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வேலு, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓம்சிவம், சமூக ஆர்வலர் முருகன், முத்தமிழ் வேந்தன், ஊராட்சி செயலாளர் வசந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!செய்திகள்

சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!

Rajan🕒 நவ. 22
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!நகரங்கள்

நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!

Anandakumar🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔