Settings

முகப்பு/செய்திகள்/நெல்லையில் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் சாலை மறியல்: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் கைது
செய்திகள்

நெல்லையில் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் சாலை மறியல்: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் கைது

🕒 21 அக்., 2026, 07:08 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நெல்லையில் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் சாலை மறியல்: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் கைது

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

✨

AI Highlights

  • •கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நெல்லையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் அனைத்தையும் தேர்தல் வாக்குறுதிப்படி உடனடியாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, நெல்லை வண்ணார்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், மகாசபா மாவட்ட தலைவர் கருப்பசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழக அரசைக் கண்டித்தும் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வண்ணார்பேட்டைச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி.கிருஷ்ணன் உள்பட மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்றனர். விவசாயிகளின் திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔