தமிழ்நாட்டில் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதால் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து இன்று மற்றும் நாளை மறுநாள் சனி ஞாயிறு வார விடுமுறை வருகிறது மொத்தமாக வெள்ளி, சனி ஞாயிறு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால் சென்னை பெங்களூர் கோவை போன்ற முக்கிய நகரங்களில் வசிப்போர் பலர் நேற்று இரவு சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர் இது தவிர அண்டை மாவட்டங்கள் மற்றும் தொலைதூர மாவட்டங்களில் தங்கி பயிலும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுதியும் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக திருநெல்வேலியல் நேற்று இரவு அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது குறிப்பாக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகிறது மூன்று நாள் தொடர் விடுமுறை என்பதால் தான் இன்று மாலை முதல் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது ஆனால் அதற்கு ஏற்ப போதிய பேருந்து வசதி இல்லாததால் கிடைத்த பேருந்துகளில் பொதுமக்கள் முண்டி அடித்தபடி இடம் படித்தனர் குறிப்பாக தென்காசி பாபநாசம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் அதிக அளவு கூட்ட நெரிசல் காணப்பட்டது முண்டியடித்தபடி பேருந்துக்குள் ஏறியும் பலருக்கு இருக்கை கிடைக்காததால் பயணிகள் சிரமத்தோடு நின்றபடியே நீண்ட தூரம் பயணித்தனர் குறிப்பாக குழந்தைகளை வைத்துக்கொண்டு பயணித்த பெண்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர் தென்காசிக்கு சென்ற அரசு பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக ஏறி குதித்து இடம் பிடித்தார். இதேபோல் நாகர்கோயில் தூத்துக்குடி மதுரை போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளிலும் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
செய்திகள்
தொடர் விடுமுறையால் திருநெல்வேலி பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்.
🕒 4 செப்., 2026, 06:00 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
