விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட வழங்கி வைத்து நடைபெற்ற பட்டாசுத் தொழிலாளர்களின் குடும்ப நலன் மற்றும் மறுவாழ்வுக்காக உருவாக்கப்பட்டுள்ள "உயிர்" அறக்கட்டளையின் இலச்சினையை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழில் மிகவும் பிரதானமான தொழிலாக விளங்கி வருகிறது. பட்டாசு ஆலைகளில் எதிர்பாராதவிதமாக ஏதேனும் விபத்து நேரிட்டால், 'நீங்கள் தனி ஆள் அல்ல; உங்களுடன் அரசும், மாவட்ட நிர்வாகமும், ஆலை உரிமையாளர்களும்,தொழிலாளர்களும் துணையாக இருக்கிறோம்' என்ற பாதுகாப்பை உறுதி செய்வதுதான் இந்த 'உயிர்' அறக்கட்டளையின் முதன்மை நோக்கம். சட்டப்பூர்வ கடமைகளையும் ஒழுங்குமுறைகளையும் தாண்டி, விபத்தில் ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருக்கும் நபரை இழக்கும் போது, அந்த குடும்பத்தைக் காக்க வேண்டிய சமூகப் பொறுப்பு நமக்கு உள்ளது.இந்த அறக்கட்டளைக்காகத் தொழில் அமைப்புகளின் CSR நிதி மூலம் பெறப்பட்ட 9 லட்சம் ரூபாய் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரின் விருப்ப உரிமை நிதியிலிருந்து (Discretionary Fund) 5 லட்சம் ரூபாய் இந்த 'உயிர்' அறக்கட்டளைக்கு உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தைக் கொண்டு வர வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், இதற்காக உழைத்த அரசு அலுவலர்கள் மற்றும் சங்கம் சார்ந்த உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த அறக்கட்டளை மூலமாகப் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என வாழ்த்துகிறேன் என பேசினார்.
அரசியல்
பட்டாசு தொழிலாளர் நலனுக்கான "உயிர்" அறக்கட்டளையின் இலச்சினையை வெளியிட்டு ஆட்சியர் சுகபுத்ரா உரை!
🕒 11 செப்., 2026, 05:11 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •பட்டாசு தொழிலாளர் நலனுக்கான "உயிர்" அறக்கட்டளையின் இலச்சினையை வெளியிட்டு ஆட்சியர் சுகபுத்ரா உரை!
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
