Settings

முகப்பு/செய்திகள்/அச்சத்தை ஏற்படுத்திய நல்ல பாம்பு! கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!
செய்திகள்

அச்சத்தை ஏற்படுத்திய நல்ல பாம்பு! கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!

🕒 8 அக்., 2026, 04:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அச்சத்தை ஏற்படுத்திய நல்ல பாம்பு! கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!
✨

AI Highlights

  • •நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைவாயில் அருகே பதுங்கியிருந்த ஆக்ரோஷமான நல்ல பாம்பை தீயணைப்புத்துறையினர் லாவகமாகப் பிடித்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைவாயில் அருகே பதுங்கியிருந்த நல்ல பாம்பை தீயணைப்புத்துறையினர் லாவகமாகப் பிடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கொக்கிரக்குளத்தில் அமைந்துள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், நுழைவாயில் அருகே உள்ள தண்ணீர் தொட்டிக்கு அருகில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைக்கண்டு உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாம்பு பிடிக்கும் கருவியின் உதவியுடன் பெரிய கல்லுக்கு அடியில் பதுங்கியிருந்த பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்தனர். அது ஒரு நல்ல பாம்பு என்பது தெரியவந்தது. சிறிய உருவத்தில் இருந்தபோதிலும், அந்தப் பாம்பு ஆக்ரோஷத்துடன் படம் எடுத்துச் சீறியது. இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔