காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணிப்பூர் எம்.பி.யும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய அங் கோம்சா பிமோல் அகோய்ஜம் மீது பல்கலைக்கழக மாணவிகள் 2 பேர் பாலியல் தொல்லை புகார் அளித்தனர். இது குறித்து காங்கிரஸ் மவுனம் காத்து வருவதாக கூறியும், காங்கிரஸ் கட்சி பெண்ணுரிமையை பேணவில்லை என கூறியும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர்கள் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தில் கீழ் பகுதியில் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம், தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும்
காங்கிரஸ் எம்பிக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர் காங்கிரஸ் கட்சி பெண்ணுரிமைக்கு எதிராக செயல்படுகிறது பெண்களை இழிவாக பேசுகிறது என பாஜகவினர் குற்றம் சாட்டினர் பாஜக ஆர்ப்பாட்டம் காரணமாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

