நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள புகழ்பெற்ற வாகைகுளம் வாகைப்பதி அய்யா நாராயண சுவாமி திருக்கோவிலில், இந்த ஆண்டின் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாகத் தொடங்கியது. இன்று காலை சிறப்புப் பூஜைகள் மற்றும் அய்யாவழிப் பக்தர்களின் அய்யா சிவசிவா அரஹரா.. பக்தி கோஷங்களுக்கு இடையே கொடியேற்றம் நடைபெற்றது. இந்த விழாவில் வாகைக்குளம் , மன்னார் கோவில், பிரம்மதேசம், அம்பாசமுத்திரம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா நாராயண சுவாமியைத் தரிசனம் செய்தனர். இன்று தொடங்கியுள்ள இத்திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும் பெருந்திருவிழா நாட்களில் தினமும் அய்யா நாராயண சுவாமி அனுமன், கருடன், வெள்ளை குதிரை மற்றும் இந்திர வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். தொடர்ந்து பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான முக்கிய திருத்தேரோட்டம் வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருவிழா நாட்களை முன்னிட்டு தினமும் சிறப்புப் பணிவிடைகளும், அன்னதானமும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செய்திகள்
வாகைப்பதி அய்யா நாராயண சுவாமி திருக்கோவில் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது!
🕒 4 செப்., 2026, 06:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
