Settings

முகப்பு/செய்திகள்/பைக் டாக்ஸி தடை கோரி வேலூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு!
செய்திகள்

பைக் டாக்ஸி தடை கோரி வேலூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு!

🕒 26 அக்., 2026, 07:41 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பைக் டாக்ஸி தடை கோரி வேலூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு!

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 4 படங்கள்):

✨

AI Highlights

  • •வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி, வேலூர் மாவட்ட அனைத்து ஆட்டோ சங்க கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவனங்களால் இயக்கப்படும் பைக் டாக்ஸி சேவைகளைத் தடை செய்ய வேண்டும், புதிய மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நுழைவு வாயிலிலேயே அவர்களைத் தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 10 பேர் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் இல்லாததால், அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் (DRO) தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔