மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டம் மற்றும் தனியார் மினி பேருந்துகளின் இயக்கத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும் மற்றும் தனியார் மினி பேருந்து சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

