சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
செய்திகள்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

🕒 10 செப்., 2026, 04:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

AI Highlights

  • ஆவனி மாத அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் அமைந்துள்ளது.இந்த கோவிலில், 18 சித்தர்கள் சந்நிதி மற்றும் குகைகள் உள்ளன. சதுரகிரி மலையில் அகஸ்தியர், போகர், கோரக்கர் உள்ளிட்ட 18 சித்தர்களும் தங்கி தவம் புரிந்ததாக நம்பப்படுவதால் தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் உள்ள சதுரகிரி மலைக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் 6 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான மலைப்பாதை வழியாக நடந்து செல்ல வேண்டும். இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆவனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி முதல் வரும் 11ஆம் தேதி வரை மொத்தம் நான்கு நாட்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது . இன்று ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை விடுதலை கோயில் அடிவாரப் பகுதியில் குவிந்தனர். பின்பு காலை 6 மணிக்கு கோயில் அடிவாரப் பகுதியில் உள்ள கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி எனவும், பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔