சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறப்பு நிலைய தீயணைப்பு அலுவலர் உயிரிழப்பு தாழையூத்து போலீசார் தீவிர விசாரணை
செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறப்பு நிலைய தீயணைப்பு அலுவலர் உயிரிழப்பு தாழையூத்து போலீசார் தீவிர விசாரணை

🕒 14 செப்., 2026, 04:53 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறப்பு நிலைய தீயணைப்பு அலுவலர் உயிரிழப்பு தாழையூத்து போலீசார் தீவிர விசாரணை

AI Highlights

  • நெல்லையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறப்பு நிலைய தீயணைப்பு அலுவலர் உயிரிழப்பு தாழையூத்து போலீசார் தீவிர விசாரணை

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

​நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலராக (போக்குவரத்து) பணியாற்றி வந்தவர் நவீன் ராஜ்குமார் (வயது 52). இவர் இன்று பணி தொடர்பாக நாரணம்மாள்புரம் நான்கு வழிச்சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. ​இந்த கொடூர விபத்தில் படுகாயமடைந்த நவீன் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த தாழையூத்து காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள தாழையூத்து போலீசார், விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்ற வாகனத்தைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்புத் துறை அலுவலர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔