சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/வக்கீல் ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
செய்திகள்

வக்கீல் ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

🕒 27 ஆக., 2026, 01:39 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வக்கீல் ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது 41). இவருடைய மனைவி ஸ்ரீ ரங்க நாச்சியார் (45). கணவன், மனைவி இருவருமே வக்கீல் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஜெகன் தனது குடும்பத்துடன் நெல்லை பாளையங்கோட்டை மகாராஜா நகர், கல்யாணி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அங்கிருந்தபடியே கணவன், மனைவி இருவரும் நீதிமன்றப் பணிகளுக்குச் சென்று வந்துள்ளனர். இந்நிலையில், இன்று வீட்டில் உள்ள படுக்கையறையில் வக்கீல் ஜெகன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜெகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலையில் காயம் இருப்பதால் கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வக்கீல் ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔