Settings

முகப்பு/செய்திகள்/தொடர் மழையால் வேரோடு சாய்ந்த 80 ஆண்டு மரத்தால் இரண்டு கூரை வீடுகள் சேதம்!
செய்திகள்

தொடர் மழையால் வேரோடு சாய்ந்த 80 ஆண்டு மரத்தால் இரண்டு கூரை வீடுகள் சேதம்!

🕒 26 அக்., 2026, 10:53 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
✨

AI Highlights

  • •மயிலாடுதுறை மாவட்டம் கிடாரங்கொண்டானில் தொடர் மழையால் 80 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து இரண்டு கூரை வீடுகள் சேதமடைந்தன; அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கிடாரங்கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் பெய்துவரும் தொடர் மழையால் 80 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து வீடுகள் மீது விழுந்ததில் இரண்டு கூரை வீடுகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

அண்ணா நகரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரது குடும்பத்தினரின் வீடுகளுக்குப் பின்புறம் இருந்த பழமையான புளியமரம், தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக திடீரென வேரோடு சாய்ந்தது. அருகில் இருந்த தென்னை மரத்தின் மீது அது விழுந்ததால் தென்னை மரம் இரண்டாக முறிந்ததுடன், ரமேஷ் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரின் கூரை வீடுகளின் மீதும் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவத்தின்போது வீடுகளில் இருந்தவர்கள் பகல் நேரத்தில் வெளியே இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும், வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் இடிந்து முழுமையாக சேதமடைந்தன.

தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து, கிராம மக்களின் உதவியுடன் வீடுகளின் மீது விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. தொடர் மழையால் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔