Settings

முகப்பு/ஆன்மீகம்/தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடைபெற்ற 26-வது குருமகா சந்நிதானத்தின் 7-ஆம் ஆண்டு குருபூஜை!
ஆன்மீகம்

தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடைபெற்ற 26-வது குருமகா சந்நிதானத்தின் 7-ஆம் ஆண்டு குருபூஜை!

🕒 17 நவ., 2026, 05:04 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடைபெற்ற 26-வது குருமகா சந்நிதானத்தின் 7-ஆம் ஆண்டு குருபூஜை! - படம் 1 - The News Outlook
📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 26-வது குருமகா சந்நிதானத்தின் 7-ஆம் ஆண்டு குருபூஜை விழா, தற்போதைய ஆதீனம் முன்னிலையில் பக்திபூர்வமாக நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறையில் உள்ள புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்தின் 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 7-ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது.

சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் பீடாதிபதியாக 1971 முதல் 2019 வரை 48 ஆண்டுகள் பணியாற்றியவர் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். சைவ சமயத்தையும் தமிழையும் வளர்ப்பதில் பெரும் பங்காற்றிய இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி பரிபூரணமடைந்தார். இவரது திருமேனி ஆதீன வளாகத்தில் உள்ள ஸ்ரீஆனந்தபரவசர் பூங்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டு, அங்கு குருமூர்த்தம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது 7-ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், குருமூர்த்தத்திற்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகளைச் செய்து வழிபாடு நடத்தினார். இந்நிகழ்வில் திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள், ஆதீன கட்டளை தம்பிரான்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தீபத்திருவிழா: குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அடையாள அட்டைகள் அணிவிப்பு!ஆன்மீகம்

தீபத்திருவிழா: குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அடையாள அட்டைகள் அணிவிப்பு!

Manimaran🕒 நவ. 24
திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!ஆன்மீகம்

திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!

Nivedha🕒 நவ. 24
தீபத் திருவிழா: கொப்பரைக்கு பூஜை நடைபெற்றதால் பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!ஆன்மீகம்

தீபத் திருவிழா: கொப்பரைக்கு பூஜை நடைபெற்றதால் பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!

Vijay🕒 நவ. 24
திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டதுஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

Srinivasan🕒 நவ. 24
திருப்பரங்குன்றத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 144 தடை உத்தரவுக்கிடையே கிரிவலம்!ஆன்மீகம்

திருப்பரங்குன்றத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 144 தடை உத்தரவுக்கிடையே கிரிவலம்!

Vijay🕒 நவ. 24
ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் அரசு கலைக்கல்லூரி வேண்டி கொதித்தெழுந்த மாணவர்கள்!தமிழ்நாடு

ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் அரசு கலைக்கல்லூரி வேண்டி கொதித்தெழுந்த மாணவர்கள்!

Muralidharan🕒 நவ. 24
நாளை புதன்கிழமை மின் தடை: எந்தெந்த ஊர்களில் மின்சாரம் இருக்காது?செய்திகள்

நாளை புதன்கிழமை மின் தடை: எந்தெந்த ஊர்களில் மின்சாரம் இருக்காது?

Ramachandran🕒 நவ. 24
விலையில்லா வேஷ்டி, சேலை தரம் குறித்து அமைச்சர் விஜய் பாலாஜி நேரில் ஆய்வு!செய்திகள்

விலையில்லா வேஷ்டி, சேலை தரம் குறித்து அமைச்சர் விஜய் பாலாஜி நேரில் ஆய்வு!

Dinesh🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔