செய்திகள்
வால்பாறையில் நேர்மைக்கு கிடைத்த பாராட்டு
🕒 24 அக்., 2026, 10:24 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
வால்பாறையில் சாலையில் பையுடன் கிடந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.70 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த சிறு குன்றா எஸ்டேட் மேலாளர் நிரஞ்சன் என்பவர் சாலையில் ஒரு கிடந்ததை எடுத்து உள்ளே பார்த்தபோது அதில் 1 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கமாக ரூ. 70,000 ஆயிரமும் இருந்துள்ளது
அதைத்தொடர்ந்து தாமதமின்றி வால்பாறை காவல் நிலையத்திற்கு சென்ற அவர் உதவி ஆய்வாளர் வடிவேலுவிடம் நடந்ததைக்கூறி ஒரு பவுன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாயை பையுடன் ஒப்படைத்ததைத்தொடர்ந்து
காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு பையுடன் நகை மற்றும் பணத்தை தவறவிட்ட சிறுகுன்றா எஸ்டேட்டை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளியான ஜமுனா ராணி என்பவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். மேலும் வழியில் கிடந்த நகை மற்றும் பணத்தை நேர்மையோடு காவல்நிலையத்தில் ஒப்படைத்த மேலாளர் நிரஞ்சனுக்கு சால்வை அணிவித்து காவல்துறையினர் உட்பட அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்
24.10.2026

