செய்திகள்
வேலூரில் ஹனி டிராப் ராணுவ ரகசியங்களை கசியவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி சிக்கினார்..
🕒 25 அக்., 2026, 08:13 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 5 படங்கள்):
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
வேலூர் மாவட்டம்
25-10-26
வேலூரில் ஹனி டிராப் ராணுவ ரகசியங்களை கசியவிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி சிக்கினார்...
வேலூர் மாவட்டத்தில் உள்ள
கீழ்வல்லம் பகுதியைச் சேர்ந்த பாபு (52) ராணுவ தளவாடப் பிரிவில் 28 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அறிமுகமான மர்மப் பெண் ஒருவர் தான் DRDO புராஜக்ட்டில் இருப்பதாகக் கூறி ஆசை வார்த்தை பேசியுள்ளார். அந்தப் பெண்ணின் வலையில் விழுந்த பாபு நாட்டின் பாதுகாப்பு மற்றும் தளவாடங்கள் குறித்த முக்கிய ரகசியங்களை வீடியோ கால் மற்றும் மெசேஜ் மூலம் பகிர்ந்துள்ளார்.
ரகசியத் தகவலின் பேரில் கீழ்வல்லத்தில் பாபுவை சுற்றிவளைத்துப் பிடித்த மத்திய உளவுத்துறையினர், வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் வைத்து இரண்டு நாட்களாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
தற்போது தாலுகா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அவரிடம், மத்திய புலனாய்வு முகமையும் விசாரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.




