Settings

முகப்பு/செய்திகள்/நாமக்கல்லில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஞாயிற்றுக்கிழமை(அக்.25) பேரணி நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ்கிரிஷ்அசோக் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
செய்திகள்

நாமக்கல்லில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஞாயிற்றுக்கிழமை(அக்.25) பேரணி நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ்கிரிஷ்அசோக் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

🕒 24 அக்., 2026, 03:47 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நாமக்கல்லில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஞாயிற்றுக்கிழமை(அக்.25) பேரணி நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ்கிரிஷ்அசோக் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழகம் முழுவதும், அக்.25 மற்றும் நவ.1–இல் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எந்தவித தடையும் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து முதல் பேரணியானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில், நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கி பொய்யேரிக் கரை சாலை, பரமத்தி சாலை, பெரியப்பட்டி சாலை, சந்தைப்பேட்டை புதூர் சாலை, பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலை வழியாக மீண்டும் பூங்கா சாலையில் பேரணி நிறைவடைகிறது. 500–க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பேரணியில் அசம்பாவிதம் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, பொதுமக்களின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது உள்ளிட்டவை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ்கிரிஷ்அசோக் சனிக்கிழமை நாமக்கல் பூங்கா சாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔