செய்திகள்
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் காட்பாடியில் பேட்டி
🕒 25 அக்., 2026, 12:40 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
வேலூர் மாவட்டம்
25-10-26
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
அரசியல் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்
காட்பாடியில் பேட்டி
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
அரசியல் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்,
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் (SR) விவகாரத்தில் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை மத்திய அரசு உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் மேலும், நீக்கப்பட்ட 13 கோடி வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும் தலைமை தேர்தல் ஆணையர் ஓய்வுபெற்ற பிறகும் அவர் மீது எந்தவொரு வழக்கும் தொடர முடியாது என்ற வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் குடிமக்களுக்குக் கூட இல்லாத பாதுகாப்பாகும்.
இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்து ஞானேஷ்குமார் பொறுப்பேற்றவுடன், நாடு முழுவதும் கிட்டத்தட்ட 13.5 கோடி வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் லட்சக்கணக்கானோர் நீக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, எஸ்.ஆர். திருத்தத்தை ரத்து செய்யக் கோரியும், ஞானேஷ்குமார் ராஜினாமா செய்யக் கோரியும் சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
இதேபோல், தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் எஸ்.ஆர். திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
தேர்தல் முறைகளில் வெளிநாட்டினர் என்ற பெயரில் ஏழை எளிய மக்கள், சிறுபான்மையினர், தலித் மற்றும் பழங்குடி மக்களின் வாக்களிக்கும் அடிப்படை உரிமை திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு எதிராக நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்
இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த போராட்டம் அவசியமானது என்றும் கூறினார்.
நாங்கள் எந்தக் கட்சியையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில்லை என்றும், திமுக அல்லது அதிமுக என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்களின் நலனுக்காகத் தங்களது மாற்றுக் கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் புழுங்கல் அரிசியை அளவுக்கு அதிகமாக பாலிஷ் செய்து வழங்குவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தச் சிக்கலை மாநில அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
மாநில அரசு இதுவரை சில ஊழல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்தால் அரசு உரிய சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

